தினமணி 19.06.2013
தினமணி 19.06.2013
பாதாள சாக்கடை பணி: துரிதமாக முடிக்க மேயர் அறிவுரை
மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை மேயர் சைதை துரைசாமி அறிவுறுத்தியுள்ளார்.
மாதவரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கான்கிரீட் சாலைகள்
அமைக்கும் பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி மற்றும்
மேயர் சைதை துரைசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, சீனிவாசா நகர், திருவள்ளுவர் தெரு, பெருமாள் கோயில்
தெரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகள்
ஆகியவற்றை பார்வையிட்டனர். இந்தப் பணிகள் மெதுவாக நடப்பதால் சாலை அமைக்கும்
பணிகள் தாமதமாகின்றன என்று பொதுமக்கள் கூறியதையடுத்து, இந்தப் பணிகளை இந்த
மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகளை மேயர்
அறிவுறுத்தினார்.
பின்னர் அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலைத் தொட்டிகள்
அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று அமைச்சரும், மேயரும்
அதிகாரிளுக்கு உத்தரவிட்டனர்.