தினமலர்
பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்கஇயந்திரம்
திருப்பூர் பாதாள சாக்கடையில் அடைப்புகளை நீக்குவதற் காக, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு இயந்திரங்களை வாங்கியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக் கடை திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. படிப் படியாக இத்திட்டம் முழுமைப்படுத்தப்பட உள்ள நிலையில், பாதாள சாக் கடையில் அடைப்பு ஏற் பட்டால் சரி செய்ய ஆட்கள் பயன்படுத்தப்பட்டனர்.நவீன முறையில் பாதாள சாக்கடை அடைப்பை விரைவில் சுத்தம் செய்யவும்; மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் போது ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கவும், மனித பயன்பாட்டை குறைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இதனடிப்படையில், மொத்தம் 12.5 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய இயந்திரங்கள் வாங் கப்பட்டுள்ளன. மூன்று சக்கர மினி டெம்போவில் பொருத்தப்பட்டுள்ளதால், எந்த இடத்துக்கும் விரைவாக எடுத்துச் செல்ல முடியும்.புதிதாக வாங்கப்பட்ட இயந்திரங்களை, மேயர் செல்வராஜ், கமிஷனர் ஜெயலட்சுமி நேற்று பார்வையிட்டனர். அவ் விரண்டு இயந்திரங்கள், பாதாள சாக்கடை பராமரிப்பு பிரிவில் ஒப்படைக் கப்பட்டன.