தினமணி 15.02.2014
பிற நகராட்சியினர் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை
தினமணி 15.02.2014
பிற நகராட்சியினர் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பேரூராட்சி
எல்லைக்குள் உள்ள ஆற்றில் வேறு நகராட்சிகளோ, ஊராட்சிகளோ புதிய ஆழ்துளை
கிணறுகளை அமைக்கத் தடை விதித்து தக்கோலம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில்
வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தக்கோலம் பேரூராட்சி மன்ற அவசரக்கூட்டம் அதன் தலைவர் எஸ்.நாகராஜன்
தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மன்றத் துணைத்தலைவர் சீனிவாசன்,
பேரூராட்சி செயல் அலுவலர் சுமா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.