தினமலர் 30.12.2009
பிறப்பு, இறப்பு சான்று முகாம்
தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் சொத்துவரி, குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம் முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு பிறப்பு தொடர்பாக 81 மனுக்கள், இறப்பு தொடர்பாக ஒன்பது மனுக்களும் பெறப்பட்டன.
பெயர் மாற்றம் தொடர்பாக, சொத்துவரியில் 26 மனுக்கள், குடிநீர் இணைப்பு தொடர்பாக 83 மனுக்கள் பெறப்பட்படன எட்டு மனுக்களுக்கு சான்றிதழை சேர்மன் வழங்கினார். நகராட்சி ஆணையாளர் அண்ணாதுரை, இன்ஜினியர் மோகன், சுகாதார ஆய்வாளர் முனிராஜ், சுகவனம் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.