தினமணி 18.05.2010
புதிய குடிநீர்த் தொட்டிகள் திறப்பு
கரூர்
, மே 18: தாந்தோன்றிமலை நகராட்சியில் ரூ.3 லட்சத்தில் புதிய குடிநீர் தொட்டிகள் அண்மையில் திறக்கப்பட்டன.தாந்தோன்றிமலை நகராட்சிப் பகுதியில் முழுமையான குடிநீர் வழங்குவதற்காக வார்டுகளில் பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
.இந்நிலையில்
, 11 –வது வார்டு பகுதியில் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு தொட்டிகள் அமைப்பதற்காக தலா ரூ.1.5 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்தார் வி. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.இதையடுத்து
, 11 –வது வார்டில் புதிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதன் திறப்பு விழா விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் ஜெ.ரேவதி தலைமை வகித்தார்.சட்டப்பேரவை உறுப்பினர் வி
.செந்தில்பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய தொட்டிகளை திறந்து வைத்தார். அப்போது, இதே பகுதியில் மேலும் ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.இதையடுத்து மேலும் ஒரு புதிய குடிநீர்த் தொட்டி அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ
.1.5 லட்சம் ஒதுக்கப்படும் என்றார் அவர். இந்நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவர் வே. வசந்தாமணி, நகர்மன்ற உறுப்பினர்கள் இ. கண்ணகி, கோடங்கிபட்டி பழனிச்சாமி, அதிமுக நகரச்செயலர் பி. சரவணன், இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் எஸ். சுந்தர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.