தினமணி 11.01.2010
புதிய பொறியியல் கல்லூரி கட்டடப் பணிகளை பார்வையிட்டார் ஆட்சியர்
திண்டிவனம், ஜன. 10: திண்டிவனம் மேல்பாக்கம் பகுதியில் அமையவிருக்கும் அரசின் புதிய பொறியியல் கல்லூரியின் கட்டடத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
÷கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.21 கோடியே 26 லட்சம் செலவில் இது கட்டப்பட்ட உள்ளது. வரும் கல்வி ஆண்டுக்குள் இப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்தக்காரர்களை கேட்டுக்கொண்டார் ஆட்சியர். திண்டிவனம் வட்டாட்சியர் சீத்தாராமன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.