தினமலர் 06.08.2010
புதிய மாநகராட்சி கட்டிடம் : துணை முதல்வர் திறந்து வைத்தார்
தூத்துக்குடி, தனியார் கட்டடத்திற்கு நிகராக கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சி புதிய பிரமாண்ட கட்டடத்தை துணை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். கட்டடம் நல்ல முறையில் கட்டப்பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.தூத்துக்குடி தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் மாவட்டமாக உருவாகி கொண்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. இந்த கோரிக்கையை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நிறைவேற்றிக் கொடுத்தனர். இதனால் தூத்துக்குடி மக்கள் பெரிய அளவில் மகிழ்ச்சியில் இருந்து கொண்டிருக்கின்றனர்.2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தூத்துக்குடி மாநகராட்சியை துவக்கி வைத்தார். மாநகராட்சி துவக்க விழாவிலே மாநகராட்சிக்கு பிரமாண்ட கட்டடம் கட்டுவதற்கு 4 கோடியே 75 லட்ச ரூபாய் அனுமதியளித்தார்.
இது தவிர பக்கிள் ஓடை சீரமைப்பு முதல் கட்ட பணிக்கு 6 கோடியே 98 லட்ச ரூபாய் மற்றும் பல்வேறு நிதியுதவிகளும் அளிக்கப்பட்டது. இதில் பக்கிள் ஓடை முதல் கட்ட பணிகள் நிறைவு பெற்று இரண்டாம் கட்ட பணிகள் ஏழரை கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியானதால் தான் 90 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற பணிகளுக்கு அரசின் நிதி ஒதுக்கீடு தாரளாமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.மாநகராட்சி துவக்க விழா அன்று முதல்வரால் அறிவிக்கப்பட்ட புதிய கட்டடம் தற்போது தனியாருக்கு இணையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், சேலம், வேலூர், தூத்துக்குடி ஆகியவற்றிற்கு மாநகராட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடைசியாக தூத்துக்குடி மாநகராட்சியில் தான் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஆனால் தற்போது கட்டட பணிகள் முடிந்து திறக்கப்படுவது தூத்துக்குடி மாநகராட்சி கட்டடம் தான்.
மற்ற இடங்களில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டில் இந்த பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சி ஆவதற்கு பெரிதும் முயற்சி மேற்கொண்ட துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று மாநகராட்சி பிரமாண்ட கட்டடத்தை திறந்து வைத்தார்.அலுவலகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்து வைத்த ஸ்டாலின் அலுவலகத்திற்குள் சென்று பார்வையிட்டார். புதிய கட்டடத்தில் மேயர், அதிகாரிகள் அறைகளும், மீட்டிங் ஹால் போன்றவை ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதி, பார்க்கிங் வசதி, தரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பக்காவாக இடம் பெற்றுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் அமர்வதற்கு லேட்டஸ்ட் மாடல் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மீட்டிங் ஹால் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வசதிகளுடன் தனியார் கட்டடங்களுக்கு நிகராக கட்டடம் அமைந்திருப்பதாக அதø ன சுற்றிப்பார்த்த ஸ்டாலின் தெரிவித்தார். மாநகராட்சி புதிய கட்டடம் மூலம் பழைய பஸ் ஸ்ட õண்ட் பகுதி ஒரு புதுப்பொலிவு பெற்றுள்ளது. ரோட்டில் செல்வோரும், பஸ், வாகனங்களில் செல்வோரும் மாநகராட்சி கட்டடத்தை உற்று நோக்கும் அளவிற்கு நல்ல வடிவமைப்புடன் காட்சியளிக்கிறது.விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் பிரகாஷ், திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி, அனிதா.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, ஜெயதுரை எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி, மேயர் கஸ்தூரிதங்கம், கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி, இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், என். பி.ஜெகன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாவட்ட துø ணச் செயலாளர் அருணா, இலக்கிய அணிச் செயலாளர் திருச்சிற்றம்பலம், திமுக மாவட்ட அலுவலகம் கருணா மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.