தினகரன் 06.12.2010
புதிய வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை
புதுக்கடை, டிச.6: கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் அமைத்து விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டுமனைகள் அமைத்து (பிளாட்டுகள்) விற்பனை செய்ய தனியார் முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது.
கீழ்குளம் பேரூராட்சி சார்பில் இதுவரை வீட்டு மனைகள் அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனவே பொதுமக்கள், விட்டுமனைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் மனை வாங்கி ஏமாற வேண்டாம் என அறிவிக்கப்படுகிறது.மேலும் இதற்கு பேரூராட்சி சார்பாக எந்த அனுமதியும் வழங்க இயலாது. மனை அனுமதி பெறப்பட்டு உள்ளது என யாராவது கூறினால் அது உண்மை அல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.