தினமணி 17.08.2010
புதை சாக்கடைத் திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலை, ஆக. 16: திருவண்ணாமலை நகராட்சி, நேரு யுவ கேந்திரா சார்பில் புதை சாக்கடை திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை நகராட்சியில் |38 கோடி செலவில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதை சாக்கடை திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவது குறித்தும், விடுதிகள், வீட்டுக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் குழாயை அடைத்துக் கொள்ளும் பொருள்களை கழிப்பறையில் போடாமல் தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை டவுன் ஹால் பள்ளி அருகே நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் பேரணியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையர் ஆர்.சேகர், பொறியாளர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்