தினமணி 19.02.2010
புதை சாக்கடைத் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர், பிப். 18: பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சியில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதை சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, ஜமாத்தார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களை ஆய்வு செய்தார்.
மேலும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, இந்தத் திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இந்த ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியர் ச. பாலுசாமி, குன்னம் வட்டாட்சியர் க. தங்கராஜ், பேரூராட்சித் தலைவர் நூர்ஜகான், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கி. கண்ணதாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.