தினமணி 12.01.2010
புதைச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நகர்மன்றத்தில் வலியுறுத்தல்
தருமபுரி, ஜன. 11:தருமபுரி நகரில் நடைபெறும் புதைச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தருமபுரி நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் நாட்டான்மாது வலியுறுத்தினார்.
தருமபுரி நகராட்சித் தலைவர் டி.சி.பி. ஆனந்தகுமார்ராஜா தலைமையில் நகராட்சி அறிஞர் அண்ணா மன்றத்தில் திங்கள்கிழமை சாதாரண கூட்டம் நடந்தது.
நகராட்சி பகுதியில் கொசுக்களை கட்டுப்படுத்த கொசு மருந்து உடனடியாக தெளிக்க வேண்டும்.
30-வது வார்டில் சுகாதாரப் பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நகர்மன்ற உறுப்பினர்கள் விடுத்தனர்.
புதைச் சாக்கடை பணியை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை அழைத்து பேச உள்ளதாகவும், நகராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் உறுதி அளித்தார். கூட்டத்தில் 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.