தினகரன் 28.03.2013
புள்ளம்பாடியில் குடிநீர் பணிகளை அதிகாரி ஆய்வு
லால்குடி: புள்ளம் பாடி பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் நடை பெற்று வரும் குடிநீர் பணி களை பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.
லால்குடி அடுத்த புள்ளம்பாடி பேரூராட்சியில் வறட்சி நிவாரணநிதி திட்டத்தின் கீழ் குடிநீர் பற்றாகுறையை போக்கும் வகையில் வார்டு எண்1,8, 14ல் அமைக்கபட்டுள்ள மினிபவர் பம்பு மற்றும் இந்தியா மார்க்2 கைப்பம்புகள் பணிகளை மாநில பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மண்டல பேரூராட்சிகளின் இயக்குனர் மார்க்கிரேட் சுசிலா, உதவி செயற்பொறியாளர் பாலகங்காதரன், பேரூராட்சி தலைவர் ஜேக்கப் அருள்ராஜ், செயல்அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் தமிழ்செல்வி, இளநிலை அலுவலர்கள் பிரகந்தநாயகி, பாலசுப்ரமணியன் உடனிருந்தனர்.