தினமணி 10.07.2013
தினமணி 10.07.2013
பூங்காக்கள் அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு
:தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ரூ. 38 லட்சம்
செலவில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை, தூத்துக்குடி சட்டப்பேரவை
உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன்,
தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு பணிகளுக்கு நிதி
ஒதுக்கீடு செய்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி 49-வது வார்டுக்குள்பட்ட கால்டுவெல் காலனியில்
ரூ. 8 லட்சம் செலவில் புதிய பூங்காவும், 44-வது வார்டுக்குள்பட்ட
மாசிலாமணிபுரத்தில் ரூ. 20 லட்சம் செலவில் புதிய பூங்காவும்
அமைக்கப்படுகின்றன.
சிதம்பரநகரில் இடிந்த சத்துணவுக் கூடத்தை புதிதாக கட்டுவதற்கு ரூ.6
லட்சமும், 48-வது வார்டுக்குள்பட்ட இந்திரா நகரில் ரூ.10 லட்சம் செலவில்
பூங்கா, ரூ.5 லட்சம் செலவில் நியாயவிலைக் கடை அமைக்கவும் இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.
இதேபகுதியில் ரூ.10 லட்சம் செலவில் சாலைப்பணிகள் மேற்கொள்ளவும்,
மில்லர்புரம் 50-வது வார்டு பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் நியாயவிலைக் கடை
அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை சி.த.
செல்லப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, இந்திரா நகர்
பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து பொதுமக்களிடம் அவர் குறைகளைக்
கேட்டறிந்தார்.
மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் க. சரவணன், மாமன்ற உறுப்பினர் தனம்,
அதிமுக நிர்வாகிகள் மில்லர்புரம் ராஜா, மூர்த்தி, ஜெகநாதன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.