தினமணி 20.11.2013
பெ.நா.பாளையத்தில் டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம்
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் டெங்கு
காய்ச்சல் மற்றும் கோமாரி நோய் பரவுவதைக் தடுக்க, பொதுமக்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ மூலமாக செவ்வாய்க்கிழமை பிரசாரம்
மேற்கொள்ளப்பட்டது.
பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், செயல்
அலுவலர் துவாரகநாத் சிங் அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் பரமசிவம்
தலைமையில் இந்த விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 18
வார்டுகளுக்கும் துப்புரவுப் பணியாளர்கள் அனுப்பப்பட்டு, அவர்கள் வீடுவீடாக
துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.