தினமணி 03.07.2013
தினமணி 03.07.2013
பெ.நா.பாளையம் அரசுப் பள்ளியில் பேரூராட்சித் தலைவர் ஆய்வு
பெரியநாயக்கன்பாளையத்தில் குப்பிச்சிபாளையம்
சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பேரூராட்சித் தலைவர்
பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கூட்டம், திங்கள்கிழமை பள்ளி வளாகத்தில்
நடந்தது. அப்போது பள்ளியை பேரூராட்சித் தலைவர் சுற்றிப் பார்த்தார்.
மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாக
இருந்ததாகவும், அங்கன்வாடி குழந்தைகள் மையம், சத்துணவுக் கூடம் ஆகியவை
சரியாக பராமரிக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவத்தை வரவழைத்து,
உடனடியாக இக்குறைகளைத் தீர்க்க அறிவுறுத்தினார். இதனையடுத்து கழிப்பிடங்கள்
சுத்தம் செய்யப்பட்டன.
வாரத்திற்கொருமுறை பேரூராட்சி துணைத் தலைவர், சம்பந்தப்பட்ட வார்டு
கவுன்சிலர், அதிகாரிகள் இப் பள்ளியை பார்வையிட்டு சுகாதாரம் பேண நடவடிக்கை
எடுப்பதோடு, அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு தரப்படும் உணவுகள் தரமானதாக
உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.