தினகரன் 28.10.2010
பெங்களூர் நகரில் வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்துங்கள்
பெங்களூர், அக். 28: பெங்களூர் நகர வளர்ச்சி குழும அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் எடியூரப்பா, வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு உத்தரவிட்டார்.
பெங்களூரிலுள்ள பி.டி.ஏ தலைமையகத்திற்கு முதல்வர் எடியூரப்பா நேற்று திடீர் விசிட் செய்தார். அங்குபி.டி.ஏ தலைவர் வத்சலா வத்சா, கமிஷனர் பரத்லால் மீனா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனைக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா “பெங்களூர் நகரைச் சுற்றிலும் அமைக்கப்படும் வட்டச்சாலைகள், நக ரின் 4 புறங்களிலும் அமைக்கப்படும் மினி லால்பாக், 10 பகுதிகளில் அமைய உள்ள பல அடுக்குமாடி பார்க்கிங் கட்டிடங்கள், நகரிலுள்ள ஏரிகளின் பராமரிப்பு மற்றும் லேஅவுட்டுகள் உருவாக்கம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். இந்த பணிகளை விரைந¢து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே பி.டி.ஏ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது முதல்வர் கேட்ட விவரங்களை உடனடியாக தெரிவிக்காத அதிகாரிகளையும், காலதாமதமாக பணிகளை மேற் கொள்ளும் அதிகாரிகளையும் எடியூரப்பா கண்டித்துள¢ளதாக தெரிகிறது. ‘மக்கள் வளர்ச்சிப் பணிகளில் மெத்த னம்கூடாது. வேகமாகநடத்தி முடிக்க வேண்டும். பி.டி.ஏ மேற்கொள்ளும் பணிகள்தரம் மிக்கதாக இருக்க வேண்டும்.
தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் கண்டறியப்பட்டால் அதற்கு அதிகாரிகளே முழுப்பொறுப்பாகும்‘ என்று முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.