தினமணி 20.05.2010
பெயரைச் சொல்லி வசூல்: நகராட்சித் தலைவர் எச்சரிக்கை
கடலூர், மே 19: தனது பெயரைச் சொல்லி பணம் வசூலித்தால் போலீஸில் ஒப்படைக்குமாறு, கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசுவின் பெயரைப் பயன்படுத்தி, அவரது தம்பி என்று கூறி, யாரோ நன்கொடை வசூல் செய்வதாக தகவல் கிடைத்து உள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி வசூல் செய்து வருவதாக அறிகிறேன்.
எனக்கு தம்பி யாரும் இல்லை. எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, நன்கொடை கேட்டால், யாரும் கொடுக்க வேண்டாம். அத்தகைய நபரைப் பிடித்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.