தினமலர் 19.03.2010
பேரணாம்பட்டை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி தீர்மானம்
பேரணாம்பட்டு:பேரணாம்பட்டு மூன்றாம் நிலை நகராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி சிறப்பு மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த பேரணாம்பட்டு கடந்த 2004ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது நகராட்சியில் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 16 லட்சம் வருமானமும், 62 ஆயிரத்து 649 பேர் மக்கள்தொகையும் உள்ளது.எனவே இதை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்த சிறப்பு மன்றக்கூட்டம் நகராட்சி தலைவர் ஆலியார் ஜூபேர் அகமது தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பேரணாம்பட்டை நகராட்சியாக உயர்த்துவதற்கு போதுமான மக்கள் தொகையும், வருமானமும் உள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்கள் அதிகளவில் கிடைக்க இதை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. செயல்அலுவலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பெண்ணரசி, நகராட்சி கவுன்சிலர்கள் அப்துல் ஜமீல், திருமால், சித்திக், மீராஞ்சி சலீம், முகமதுபாஷா, மனோ, சாம்ராஜ், ஜூபேர் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.