தினமணி 3.11.2009
பேரிடர் மேலாண்மைப் பயிற்சி
கோவை, நவ. 2: கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை செயல்விளக்கப் பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம், கோவை மாநகராட்சி ஆகியன இணைந்து மாநகராட்சியில் உள்ள 85 பள்ளிகளிலும் இப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. “நகர்புற நிலநடுக்க பாதிப்பு குறைப்பு‘ என்னும் தலைப்பின் கீழ் இப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்பை மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கிவைத்தார்.
மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.துணை மேயர் நா.கார்த்திக், கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம்,கல்விக்குழு உறுப்பினர்கள் மீனா லோகநாதன், சோபனா செல்வன், வி.கே.எஸ்.கே.செந்தில்குமார், கார்த்திக் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரா.ஷாரன் சங்கீதா, பயிற்சி நிலையத் தலைவர் எம்.பிராங்கிளின் ஆகியோர் பயிற்சி அளித்தனர்