தினமணி 17.07.2013
தினமணி 17.07.2013
பேரூராட்சி அலுவலகம் திறப்பு
பெருந்துறை அருகே ரூ.20 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்ட கருமாண்டிசெல்லிப்பாளையம் பேரூராட்சியின் புதிய அலுவலகத்தை
வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் ஞாயிற்றுக்கிழமை
திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியது: தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்க
முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
வருவாய்த் துறை சார்பில் நடைபெறும் “அம்மா’ திட்டம் அனைத்து
மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது என்று, மத்திய அரசின் உயர் அதிகாரிகள்
கருத்து தெரிவித்துள்ளனர். பெருந்துறை, சத்தியமங்கலத்தில் போக்குவரத்து
காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.
இதைத்தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் 79 பேருக்கு ரூ.9 லட்சத்து
48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு மாவட்ட
ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். பேரூராட்சிகளின் மாவட்ட உதவி
இயக்குநர் கலைவாணன் வரவேற்றார்.
பேரூராட்சித் தலைவர் ஜானகி குப்புசாமி, பெருந்துறை தொகுதி அதிமுக
செயலாளர் திங்களூர் கந்தசாமி, பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன் உள்பட பலர்
பங்கேற்றனர்.