தினமலர் 12.04.2010
பேரூராட்சி ஆபீசுக்கு புதிய கட்டடம்
சூலூர் : சூலூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, பேரூராட்சி வளாகத்தில் நடந்தது.சூலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பேரூராட்சி அலுவலகம் 80 ஆண்டு பழமையானது. புதிய அலுவலகம் கட்ட, மாநில அரசின் பகுதி-2 திட்டத்தின் மூலம் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழு அறைகளுடன் 2,750 சதுர அடியில் ஆறு மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட் டுக்கு வரவுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில், சூலூர் பேரூராட்சி தலைவர் பொன்முடி, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கருப்பண்ணண், தங்கவேலு, செயல்அலுவலர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் நாகராஜ் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.