தினகரன் 28.07.2010
பேரூராட்சி கூட்டம்
கரூர், ஜூலை 28: புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், செயல் அலுவலர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் முருகன், தமிழரசி, முரளிராஜா, சுந்தராம்பாள், அன்பழகன், பெரியண்ணன், சசிகலா, நல்லசாமி, பழனிசாமி, முத்துசாமி, சக்திவேல், அன்னபூரணி கலந்து கொண்டனர். பேரூராட்சி நிர்வாக அலுவலக கட்டடங்களின் மீது தமிழ் வாழ்க என்ற சொல் பொறித்த மின் ஒளிப் பலகையை ஒளிரும் எழுத்துக்கள் கொண்டதாக அமைப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.