பேரூராட்சிகளில் துப்புரவாளர் காலிபணியிடத்திற்கு பதிவு மூப்பு
சிவகங்கை: “பேரூராட்சிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப, பதிவு மூப்பு விபரம் வெளியிட்டுள்ளதாக,” வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில், எட்டு பேரூராட்சிகளில் துப்புரவாளர் காலிபணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளது. பதிவுதாரர்கள், உரிய சான்றுகளுடன், மார்ச் 1ல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து, பதிவு மூப்பு விபரத்தை தெரிந்துகொள்ளலாம். முன்னுரிமை அற்றவர்கள்: இளையான்குடி ஆதிதிராவிடர் (பொது)-1, திருப்புத்தூர் மிக பிற்பட்டோர் -1, பகிரங்க போட்டியினர் 2, கண்டனூர் பிற்பட்ட வகுப்பினர் – 1, சிங்கம்புணரி பகிரங்க போட்டியினர் – 1.முன்னுரிமை உள்ளோர்: திருப்புத்தூர் பிற்பட்டோர் -1, மிக பிற்பட்டோர் -1, நெற்குப்பை மிகபிற்பட்டோர் -1, பகிரங்க போட்டியினர்- 1, பள்ளத்தூர் அருந்ததியினர் – 1, திருப்புவனம்- அருந்ததியினர் – 1, புதுவயல் பகிரங்க போட்டியாளர் – 1 என்ற விகிதத்தில் எடுக்கப்பட உள்ளனர், என்றார்.