தினமணி 19.07.2013
தினமணி 19.07.2013
பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம்:மாநகராட்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு பாராட்டு
அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாநகராட்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கான பாராட்டு விழா ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.
மாநில மாநகராட்சி ஊழியர்களின் கூட்டமைப்புத் தலைவர் ச.நா.சண்முகம்
தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் தலைவர்
த.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பிடித்த ஆ.நித்யா, சு.சத்யன், எஸ்.சங்கர
நாராயணன் ஆகியோருக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் நகராட்சி ஊழியர்கள் மாநில கூட்டமைப்புத் தலைவர்
எஸ்.குமரிமன்னன், மாநகராட்சி பொறியாளர் கே.ஆறுமுகம், பொறியாளர்
ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.