தினமணி 12.11.2009
பொதுப் பணிகள் நாள் உறுதிமொழியேற்பு
திருச்சி, நவ. 12: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுப் பணிகள் நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மேயர் எஸ். சுஜாதா தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், உதவி ஆணையர்கள் சே. சொக்கலிங்கம், கு. மானோஜி, நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“துறைகளில் நேர்மையும், ஒளிவுமறைவற்ற தன்மையும் இடம்பெற தொடர்ந்து அயராது பாடுபடுவோம். ஊழலை அறவே ஒழித்திட இடையராது முயல்வோம். நாட்டு மக்களுக்கு உயர் நெறிகளின் அடிப்படையிலான சேவைகள் புரிவோம். எவ்வித அச்சமும், தயவுமின்றி நம் மனசாட்சி காட்டும் நெறியின்படி கடமையாற்றுவோம்’ என அனைவரும் உறுதிமொழியேற்றனர்.