தினகரன் 16.08.2010
போடி நகராட்சிக்கு கலெக்டர் பரிசு
போடி, ஆக. 16: குப்பை இல்லாத போடி நகராட்சிக்கு கலெக்டர் பரிசு வழங்கி கவுரவித்தார். தேனி மாவட்டத்தில் போடி, தேனி, பெரியகுளம், கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி என மொத்தம் 6 நகராட்சிகள் உள்ளன. இதில் போடி நகராட்சி குப்பையில்லாத நகராட்சியாக தேர்வுபெற்றது. மேலும், வர்த்தக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள் பறிமுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
குப்பைகள் இல்லாதது மற்றும் பாலித்தீன் பை உபயோகத்தை கட்டுப்படுத்தியதற்காக போடி நராட்சிக்கு மாவட்ட கலெக்டர் முத்துவீரன் சுதந்திர தினவிழாவில் பரிசு வழங்கி கவுரவித்தார். நகராட்சி ஆணையர் சரவணகுமார் பரிசை பெற்றார்.