தினமணி 26.08.2010
மகப்பேறு உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு பரிந்துரை
சிவகங்கை, ஆக. 25: காரைக்குடி நகராட்சி ஆணையர் அறிவித்துள்ள மகப்பேறு உதவியாளர் பணியிடத்துக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி–மகப்பேறு உதவியாளர் அல்லது ஆக்சிலரி நர்ஸ் சான்று அல்லது மகப்பேறு உதவியாளர் டிப்ளமோ தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு நர்ஸ் மற்றும் மிட்வைப்ஸ் சட்டம் 1926-ன் கீழ் பதிவு செய்துள்ளவர்கள் மட்டும்.
வயது வரம்பு– 1.7.2010 அன்று தாழ்த்தப்பட்டோர் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 37. பகிரங்கப் போட்டியாளர்களுக்கு வயது வரம்பு 35.
பரிந்துரை விவரம: தாழ்த்தப்பட்டோரில் முன்னுரிமையற்றவர்களுக்கு 23.3.2006. மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் முன்னுரிமையற்றவர்களுக்கு 30.7.2006. இவர்கள் மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்படுவர். பிற்படுத்தப்பட்டோரில் முன்னுரிமையற்றவர்களுக்கு 21.7.2004. இவர்களில் காரைக்குடி நகராட்சி எல்கைக்குள் உள்ளவர்கள் மட்டும் பரிந்துரைக்கப்படுவர்.
மேற்குறிப்பிட்ட பதிவு மூப்பு உள்ளவர்கள் ஆகஸ்டு 26-ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகி பரிந்துரை விவரத்தைத் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) மு. கருணாகரன் தெரிவித்துள்ளார்.