மாலை மலர் 28.12.2013
மஞ்சள் தேய்த்து பெண்கள் குளிக்க வேண்டும்: மேயர் அறிவுரை

சென்னை, டிச.28 – மாநகராட்சியால்
நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் பெண்கள் மார்பக புற்று நோய், கர்ப்பபை வாய்
புற்று நோய் கண்டறியப்பட்டதை சுட்டிக் காட்டி மேயர் சைதை துரைசாமி
பேசியதாவது:–
மஞ்சள் மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது.
எனவேதான் முன்னோர்கள் வாழ்வியலோடு தொடர்புபடுத்தி பெண்கள் மஞ்சள் தேய்த்து
குளிக்க வேண்டும் என்றார்கள். இப்போதெல்லாம் பெண்கள் அதை பின்
பற்றுவதில்லை. அவசியம் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும்.
அது பல்வேறு நோய்களை தடுக்கும். அதே போல் ஆண்களும், மஞ்சள் பொடியை உணவில் தினமும் சேர்த்து கொள்ள வேண்டும்’’ என்றார்.