தினமலர் 02.03.2010
மணல்மேடு பேரூராட்சி கூட்டம்
மணல்மேடு : மணல்மேடு பேரூராட்சி கூட்டம் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் மணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
மணி(துணைத்தலைவர்) : நாகை மாவட்ட அளவில் பேரூராட்சிகளுக்கான இன்ஜினியர் பணியிடம் காலியாக இருப்பதால் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. காலி பணியிடத்தை நிரப்ப அரசை வலியுறுத்த வேண்டும்.
தலைவர்: இன்ஜினியர் பணியிடம் நிரப்புவது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடிதம் எழுதப்படும்.
டெய்சி : அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
தலைவர்: பேரூராட்சி பகுதியில் கடைவீதி மற்றும் சாலை சந்திப்பு, பள்ளி வளாகம் உட்பட 5 இடங்களில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை அனுப்பப்படும்.
அமிர்தலிங்கம்: ராதாநல்லூர் இடுகாட்டில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடராஜன்: மணல்மேடு பேரூராட்சிக்கு உட்பட்ட குளங்கள், வாய்க்கால்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. அவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமிர்தலிங்கம் : மணல்மேடு போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கூடுதல் போலீசார் நியமிக்க ஆவன செய்ய வேண்டும்.
தலைவர் : கூடுதல் போலீசார் நியமிக்க கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு கோரிக்கை விடுக்கப்படும். நீர் நிலைகளை தூர்வார பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. பின்னர், பழுதடைந்துள்ள டிப்பர் வாகனத்தை சீர் செய்வது என்பன போன்ற தீர்மானங்ககள் நிறைவேற்றப்பட்டன.