தினமணி 17.07.2013
தினமணி 17.07.2013
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
தேவகோட்டையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலகம் அருகே பேரணியை நகர்மன்றத் தலைவர் சுமித்ரா தொடக்கி
வைத்தார். இதில் மேலாளர் பிச்சை மைதீன், மகளிர் மன்றத்தினர், பள்ளி மாணவ,
மாணவியர் கலந்து கொண்டனர்.
பேரணி தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் கலந்து
கொண்டவர்கள் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்திச்
சென்றனர்.
பேரணி நிறைவில் மழை நீர் சேகரிப்பின் நோக்கம் குறித்து நகர்மன்றத் தலைவர் உரையாற்றினார்.