தினமணி 16.08.2013
தினமணி 16.08.2013
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
அபிராமம் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி, வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் (பொறுப்பு) எம். மாரி தலைமையில் நடைபெற்ற
பேரணியை செயல் அலுவலர் ஆர். ராஜாராம் துவக்கி வைத்தார். பேரணியில்
பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், பேட்டை தொடக்கப்
பள்ளி மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர்.
முக்கிய வீதிகள் வழியாக பேரணியினர் மழை நீர் சேகரிப்பு குறித்த
கோஷங்களை முழங்கியபடி சென்றனர். சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி
இயக்குநர் கோ. தெய்வநாயகம் ஆலோசனையில் பேரணி ஏற்பாடுகளை செயல் அலுவலர்
ராஜாராம் உள்ளிட்டோர் கவனித்தனர்.