தினமணி 28.06.2013
தினமணி 28.06.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி மற்றும்
தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழக்கரை நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக
கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துதல் குறித்த பள்ளி
மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை நகர்மன்றத் தலைவர்
ராவியத்துல் கதரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ஹாஜா
முகைதீன், தலைமை எழுத்தர் நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி
நகரின் முக்கிய சாலைகளான கிழக்கு தெரு, மேலத் தெரு, கஸ்டம்ஸ் ரோடு, தெற்கு
தெரு, வடக்கு தெரு பகுதிகளில் சென்றது. துப்புரவு ஆய்வாளர்
திண்ணாயிரமூர்த்தி நன்றி தெரிவித்தார்.