தினமணி 14.06.2013
தினமணி 14.06.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
காரமடை பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
காரமடை அரசு நடுநிலைப் பள்ளி முன்பு துவங்கிய பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் டி.டி ஆறுமுகசாமி தலைமை தாங்கினார்.
பேரணியில் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள்
கந்தசாமி, வேணுகோபால், முத்துசாமி, மனோகரன் உள்ளிட்டோரும், பள்ளிக்
குழந்தைகளும், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேரூராட்சி அலுவலகத்தில்
முடிவுற்றது.