தினமணி 24.10.2014
தினமணி 24.10.2014
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:-
காமராஜர் சாலை, ஜி.பி. சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில்
மழையால் சேதமடைந்த சாலைகளை உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மேயர் சைதை
துரைசாமி, அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேற்கண்ட இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோல்டுமிக்ஸ் எனப்படும் கலவையைக் கொண்டு சேதமடைந்த சாலைகள்
சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு டன் கோல்டு மிக்ஸ் கலவையின் விலை ரூ.17,500
ஆகும். மாநகராட்சி சார்பில் சுமார் 500 டன் கலவைகள் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு
செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர்
விக்ரம் கபூர், சென்னை குடிநீர் வழங்கல் வாரிய இயக்குநர் சந்திரமோகன்
ஆகியோர் உடன் இருந்தனர்.
சாந்தோம் சாலையில் கழிவுநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.