தினகரன் 11.11.2010
மழையால் நோய் பரவும் வாய்ப்பு குடிநீர் விநியோகத்தை கண்காணிக்கிறது மாநகராட்சி
திருப்பூர், நவ.11: திருப்பூர் மாநகரில் மழையின் காரண மாக நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, குடிநீர் சுத்தமாக வினியோகிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பூர் மாநகர பகுதிகளில் மழைக்காலம் தொடங்கி உள்ளதைத்தொடர்ந்து குடிநீரால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, விஷக்காய்ச்சல் போன்ற நோய் களை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது.
மாநகர பகுதிகளில் சுத்தமான குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறதா?, குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? குடி நீர் விநியோகிக்கும் முன்பு குளோரின் மாத்திரைகள் அல்லது பிளீச்சிங் பவுடர் கலக்கப்பட்டு சுத்திகரித்து விநியோகம் செய்யப்படுகி றதா? என்பது கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி பொறியாளர் கவுத மன் கூறுகையில், “திருப்பூர் மாநகரில் மழை காரணமாக ஆற்று நீரில் மழைநீர் கலந்திருக்கும் என்பதால், குடிநீருடன் குளோரின் மருந்துகளை கூடுதலாக சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகள் சுத்த மாக உள்ளதா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
சாக்கடை தூர்வாரும் பணி தீவிரம் :
மாநகரில் மழையின் காரணமாக சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், அடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடைகள் தூர்வாரும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூர், வாவிபாளையத்தில் உள்ள மந்திரி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் ஜே.சி.பி. வாகனம் மூலம் தூர்வாரப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.