தினமணி 18.05.2010
மாநகராட்சி அலுவலகத்தில் பெயர் மாறுதல் முகாம்
சேலம்
, மே 18: சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு பெயர் மாறுதல் முகாமில் 478 பேருக்கு பெயர் மாறுதல் செய்யப்பட்டது.சேலம் மாநகராட்சிக்கு சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள் செலுத்துவோர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளபடி பதிவேடுகளில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
.காலை
11 மணிக்குத் தொடங்கிய இந்த சிறப்பு முகாம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. முகாமை மேயர் ரேகா பிரியதர்ஷிணி தொடங்கி வைத்தார். ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். துணை மேயர் பன்னீர்செல்வம், உதவி கமிஷனர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் நான்கு மண்டலங்களையும் சேர்ந்த
554 பேர் பெயர் மாறுதல் கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களில் 478 பேருக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.ஒரு சிலர் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை இணைப்பதற்கு பதிலாக அதன் நகலை இணைத்துள்ளதாகவும் அவர்களிடம் உண்மையான சான்றிதழ் பெறப்பட்ட பின்னர் அவர்களுக்கும் பெயர் மாறுதல் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்
.