தினமணி 16.08.2013
தினமணி 16.08.2013
மாநகராட்சி அலுவலகத்தில்…
ஈரோடு மாநகராட்சியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை துணைமேயர் கே.சி.பழனிசாமி ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.
அதைத்தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.
50 பேருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மண்டலத் தலைவர்கள்
இரா.மனோகரன், கேசவமூர்த்தி, முனியப்பன், காஞ்சனா பழனிசாமி, மாநகராட்சிப்
பொறியாளர் ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் அசோக்குமார் மற்றும் மாமன்ற
உறுப்பினர்கள் பங்கேற்றனர்.