தினமலர் 16.02.2010
மாநகராட்சி உரிம கட்டணம் பத்து மடங்கு.உயர்வு : குறைக்க வேண்டுமென வணிகர்கள் கோரிக்கை
சென்னை:வணிக உரிம கட்டணத்தை சென்னை மாநகராட்சி பல மடங்கு உயர்த்தியுள்ளது, வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரையில் அனைத்திற்கும் மாநகராட்சி உரிமம் பெற வேண்டும். அந்த உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.
புதுப்பிக்காத மற்றும் உரிமை பெற வணிக நிறுவனங்கள் மீது சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.கடந்த பத்து ஆண்டுகளாக உயர்த்தப் படாமல் இருந்த உரிமக் கட்டணத்தை, கடந்தாண்டு, சென்னை மாநகராட்சி உயர்த்தியது. இக்கட்டணத்தை இந்தாண்டு முதல் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமக்கட்டணத்தை செலுத்தி, புதுப்பிப்பதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 31ம் தேதி வரை உள்ளது. இந்நிலையில், புதிய வணிக உரிமக்கட்டணத்தை பார்த்த வணிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கடந்த 2009-10ம் ஆண்டிற்கான வணிக உரிம கட்டணம், மளிகை கடைகளாக இருந்தால் 200 ரூபாய் , துப்புரவு வரி 50, உணவு கலப்பட வரி 90 ரூபாய் என, 340 ரூபாய் வசூலிக்கப்பட்டது. டீக்கடைகளுக்கு வணிக உரிமத் திற்கு 500 ரூபாய், துப்புரவு கட்டணம் 125, கலப்பட வரி 90 என 715 ரூபாயும், டிபார்ட்மென்டல் கடைகளுக்கு 1,740 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.இந்நிலையில், இந்தாண்டு உரிமத்தை புதுப்பிக்கும் வணிக நிறுவனங் களுக்கு 10 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வணிக கட்டடங்களின் அளவை பொறுத்தும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இதன் படி, 1,000 சதுரடிக்குள் உள்ள மளிகை கடைக்கு வணிக உரிமம் 200லிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட் டுள்ளது. துப்புரவு வரி உரிமக்கட்டணத்தில், 25 சதவீதம் என்பதால் 500 ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறாக மளிகை கடை வைத்திருப்பவர்கள் 2,590 ரூபாய் கட்ட வேண்டியுள்ளது.அடுத்ததாக,1,000 சதுரடிக்கு மேல், வணிக உரிமம் 3000 ரூபாய், துப்புரவு வரி 25 சதவீதம் என்ற வகையில், 750 ரூபாய் மற்றும் உணவு கலப்பட வரி 90 ரூபாய் சேர்த்து 3,840 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.இதே போன்று டீக்கடைகள், டிபார்ட்மென்டல் கடைகள், டெய்லர் கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சுவிட்ச் மற்றும் பேப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கும் 10 மடங்கு கட்டணம் செலுத்துமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள் ளது.ஆண்டுதோறும் மார்ச் மாதம் நெருங் கும் முன்னரே பெரும்பாலான வணிக நிறுவன உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்கும் பணியை துவக்கி விடுவர். இந்தாண்டில் புதிய கட்டணத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். வணிகர் சங்கங்கள் சார்பில் இக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வணிகர் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:பத்து மடங்கு கட்டண உயர்வு என்பது மிகவும் வேதனைக்குரியது. ஏற்கனவே, பணியாளர்கள் கிடைக்காமை,தொழில் வரி உயர்வு போன்ற பிரச்னைகளால் அவதிப்படும் எங்களால் இந்த உரிமக்கட்டண உயர்வை ஏற்க முடியாத நிலையில் உள்ளோம்.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறிது சிறிதாக உயர்த்தியிருக்கலாம். பட்ஜெட் வெளியாகும் போது வணிகர்களை ஆலோசிப்பது போன்று இதில், எங்களை அழைத்து யாரும் ஆலோசிக்கவில்லை.கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இது தவிர, உரிமக்கட்டணம் கட்டும் போது கட்டடத்தின் சொத்து வரி ரசீது கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.வாடகை இடத்தில் கடை நடத்துபவர்கள் உரிமையாளர்களிடம் வரி ரசீதை கேட்க முடியாத நிலை உள்ளது. இது தவிர, வருமான வரி செலுத்துவதற்கான சான்றையும் கேட்கின்றனர். இதுஎங்களை மிகுந்த பாதிப்பிற் குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு சங்க பிரதிநிதிகள் கூறினர்.
இதுகுறித்து, மளிகை கடை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, “”விற் பனை பொருட்களின் விலை உயரும் போது மக்களை பாதிக்காமல் இருக்க குறைந்த லாபம் வைத்து விற்பனை செய்ய அறிவுறுத்தும் அரசு, உரிமத்திற்கான கட்டணத்தை மட்டும் பல மடங்கு உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை,” என்றார்.