தினகரன் 14.06.2010
மாநகராட்சி கட்டிடங்கள், பூங்காக்களில் தெளிவுரையுடன் திருக்குறள் பலகை வைக்கும் திட்டம் மேயர் தொடங்கி வைத்தார்சென்னை
, ஜூன் 14: ‘வாயில் தோறும் வள்ளுவம்‘ என்ற திட்டத்தின் கீழ், மாநகராட்சி கட்டிடங்களில் தெளிவுரையுடன் கூடிய திருக்குறள் பலகை வைக்கும் திட்டத்தை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து கட்டிடங்களிலும்
‘வாயில் தோறும் வள்ளுவம்‘ என்ற திட்டத்தின் கீழ், தெளிவுரையுடன் கூடிய திருக்குறள் எழுதப்பட்ட பலகைகள் வைக்கும் திட்டத்தை ரிப்பன் மாளிகையில் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது
:மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தப்படி
, ‘வாயில் தோறும் வள்ளுவம்‘ என்ற திட்டத்தின் கீழ் ரிப்பன் மாளிகையில், ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு‘ என்ற குறள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய தெளிவுரையும் அதில் இடம் பெற்றுள்ளது. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மருத்துவமனை கட்டிடங்கள், சென்னைப் பள்ளி கட்டிடங்கள் என மாநகராட்சிக்கு சொந்தமான 2,020 கட்டிடங்களில் தெளிவுரையுடன் கூடிய திருக்குறள் எழுதப்பட்ட பலகைகள் வைக்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான 480 பெரிய பூங்காக்களிலும் இந்த பலகைகள் வைக்கப்படும். ஒவ்வொரு கட்டிடத்திலும் ரூ.2,500 செலவில் இந்த திருக்குறள் பலகைகள் வைக்கப்படும். இந்த பணியை செம்மொழி மாநாடு தொடங்குவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் பேசினார்.ஆணையர் ராஜேஷ்லக்கானி பேசுகையில்
, ‘மாநகராட்சியின் இணைய தளம் தமிழில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஓரிரு தினங்கள் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்‘ என்றார்.துணை மேயர் ஆர்
.சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, கவுன்சிலர்கள் தேவராஜன், வேம்பாத்தாள், கிருபாகரன், துரைராஜ், பிரபு, கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.