தினகரன் 27.05.2010
மாநகராட்சி கமிஷனராக சுப்பையன் பொறுப்பேற்றார்
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி கமிஷனராக சுப்பையன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாநகராட்சி கமிஷனராக இருந்த பாஸ்கரன் சென்னை முதல்வரின் தனிப்பிரிவு டி.ஆர்.ஓ., மற்றும் செய்தித்துறை இயக்குனர் (பொ) மாற்றப்பட்டார். சென்னை ஆவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய சுப்பையன், நெல்லை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். மாநகராட்சி கமிஷனராக சுப்பையன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 98ம் ஆண்டு மத்திய அரசு பணியில் சேர்ந்த சுப்பையன், பின்னர் 2000ம் ஆண்டு மாநில அரசு பணிக்கு திரும்பினார். சுப்பையனின் சொந்த ஊர் பெரம்பலூர். புதிய கமிஷனருக்கு மேயர், துணைமேயர் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்ற நாளில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது கமிஷனருக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது.