தினமலர் 03.08.2010
மாநகராட்சி குழு தேர்தல்
மதுரை
: மதுரை மாநகராட்சி நிலைக்குழுக்களான கணக்கு, நகரமைப்பு மற்றம் அபிவிருத்தி குழுக்களில் தலா ஒரு இடம் காலியாக இருந்தது. இக்குழுக்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. கணக்கு குழுவுக்கு தம்பிதுரை (வார்டு 29), நகரமைப்பு குழுவுக்கு காதர் அம்மாள் (வார்டு 53) ஆகியோர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனைக்குப் பின், போட்டியின்றி இவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கமிஷனர் செபாஸ்டின் அறிவித்தார்.