தினமலர் 23.07.2010
மாநகராட்சி நவீன ஆடு வதைக்கூடம் சுகாதாரத்தைக் காக்க முயற்சி
மதுரை : மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன ஆடு வதைக் கூடம் அடுத்த வாரம் துவக்கப்பட உள்ளது. அதன் பிறகு, இந்த இடத்தைத் தவிர, வேறு எங்கும் ஆடுகளை வெட்டக் கூடாது என்று உத்தரவிடப்படும்.நகரில் கண்ட இடங்களில் ஆடுகள் வெட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதைத்தடுப்பதற்காக, ஒரே இடத்தில் சுகாதாரமான முறையில் ஆடுகளை அறுக்கும் வகையில் நவீன வதைக் கூடத்தை மாநகராட்சி அமைக்கிறது. 3.5 கோடி ரூபாய் செலவில் அனுப்பானடியில் கட்டப்படும் இக்கூடம், அடுத்த வாரம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இங்கு சித்திரவதை செய்யப்படாமல் ஆடுகளை வெட்ட வேண்டும் என்பது முக்கிய நோக்கம். முதலில், கன்வேயர் பெல்ட் வழியே கூடத்திற்குள் அனுப்பப்படும் ஆட்டுக்கு, மின்சார அதிர்ச்சி கொடுக்கப் படுகிறது. உடனே ஆடு மயங்கி விழுகிறது. அதன் பிறகே, ஹலால் முறையில் துள்ளாமல், துடிக்காமல் ஆட்டின் தலை வெட்டப்படுகிறது. ஆட்டின் ரத்தம் வெளியேறியதும், கால்கள் கட்டப்பட்டு இயந்திரம் மூலம் தூக்கிச் செல்லப்படும் ஆட்டின் தோல், தானியங்கி இயந்திரம் மூலம் உரிக்கப்படுகிறது.பின் ஆட்டின் குடல், ஈரல், கால்கள் போன்ற பாகங்கள் ஒவ்வொரு கட்டமாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் குழாய்கள் அமைக்கப்பட்டு வெட்டுபவர் கைகளையும் கத்தியையும் கழுவ ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் பரிசோதித்து, சான்றிதழ் தந்த பிறகே, ஆடுகள் வெட்டப்படும். கடைசியிலும் டாக்டர் “சீல்‘ வைப்பார். நோய்வாய்ப்பட்ட ஆடுகள், வெட்டப்பட அனுமதிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு ஆட்டுக்கும் டோக்கன் தரப்பட்டு, அதன் இறைச்சி, ஆட்டின் உரிமையாளருக்கு தரப்படும்.
நேற்று உயிருள்ள ஆட்டை செலுத்தி, இயந்திரங்கள் செயல்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன் ஆய்வு செய்தனர். கமிஷனர் கூறும்போது, “”இக்கூடம் துவக்கப்பட்ட பிறகு, நகரில் ஆடுகள் வெட்டப்படுவது தடை செய்யப்படும். இதன் அருகிலேயே விரைவில் குளிர்பதன வசதி வசதி ஏற்படுத்தப்படும்” என்றார்.
சுவையான இறைச்சி எது?:இக்கூடம் அமைப்பதற்கு ஆலோசகர்களாக இருந்த டாக்டர்கள் கோவிந்தராஜன், பக்தா கூறும்போது, “”முழு உடலாக இருந்தால், 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் பாதுகாத்து, 10 மணி நேரம் கழித்து உண்டால் அந்த இறைச்சி தான் சுவையாக இருக்கும். இறைச்சியை துண்டுகளாக வெட்டி, வீட்டுக்கு எடுத்துச் சென்றால், பிரிட்ஜ் பிரீஸரில் மைனஸ் 1.5 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் 10 மணி நேரங்கள வைத்திருந்து அதன் பிறகு சாப்பிட வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் என்சைம்கள் சுரந்து, இச் சான்றுகளுடன் நேரில் வந்து பதிவுமூப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பிச்சம்மாள் தெரிவித்துள்ளார்.