தினமணி 15.10.2013
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்குவிலையில்லா மிதிவண்டிகள்
மதுரை மாநகராட்சி மாசாத்தியார் மகளிர்
மேல்நிலைப்பள்ளி மற்றும் ஈவெரா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ,
மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாக்களில், ஈவெரா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 766 பேருக்கும்,
கம்பர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 78 பேருக்கும், சுந்தரராஜபுரம்
மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 85 பேருக்கும், அவ்வை மேல்நிலைப்பள்ளியில்
பயிலும் 132 பேருக்கும், கஸ்தூரிபாய் காந்தி மேல்நிலைப்பள்ளியில் பயிலும்
123 பேருக்கும், நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்
155 பேருக்கும், மாசாத்தியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 105 பேருக்கும்,
பாரதிதாசனார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 72 பேருக்கும் ஆக மொத்தமாக
1,416 மாணவ, மாணவியருக்கு மேயர் விவி ராஜன்செல்லப்பா விலையில்லா
மிதிவண்டிகளை வழங்கினார்.
விழாவுக்கு மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால் தலைமை வகித்தார்.
மண்டலத்தலைவர் பெ.சாலைமுத்து, உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், சின்னம்மாள்,
கல்விக்குழுத் தலைவர் சுகந்தி அசோக், சுகாதாரக்குழுத் தலைவர் முனியாண்டி,
கல்வி அலுவலர் மதியழகராஜ், பிஆர்ஓ சித்திரைவேல், மாமன்ற உறுப்பினர்
கருப்பையா, தலைமை ஆசிரியைகள் விஜயலட்சுமி, கண்ணம்மாள் மற்றும்
ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.