தினமலர் 16.04.2010
மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி
கோவை: மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க, மாநகராட்சி ஆசிரியர்களுக்கு மொழிப்பயிற்சி அளிக்க கல்விக் குழு கூட்டத்தில் முடிவானது.கோவை மாநகராட்சி கல்விக் குழு கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.குழு தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மேட்டுப்பாளையம் ரோடு ஹவுசிங்யூனிட் அருகே 18 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பை கிடங்கு வெள்ளலூருக்கு மாற்றம் செய்யப்பட்டது. வெள்ளலூருக்கு மாற்றம் செய்யப்பட்ட பின் குப்பை கிடங்கிலிருந்த குப்பைகளை மக்கச்செய்து மலைபோல் மாற்றி அந்த இடத்தை குன்று போல் உருவாக்கியிருக்கின்றனர்.
செடி கொடிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியை நவீன வாட்டர் தீம் பார்க்காக மாற்ற கோவை மாநகராட்சி கல்வி மற்றும் பூங்காக்கள் குழு நேற்று முடிவு செய்தது. ஆர்.எஸ்.புரம் ஆண்கள் பள்ளியாக இருந்தது. தற்போது இருபாலர் பள்ளியாக மாற்றம் செய்யப்பட் டுள்ளது. பள்ளியிலுள்ள பிரம்மாண்டமான மைதானம் மாநகராட்சி கால்பந்து மைதானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. வடகோவை மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு பின்பகுதியிலுள்ள கட்டட கட்டமைப்புகளை பயன்படுத்தி அங்கு நவீன அறிவியல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உக்கடம் ஒக்கிலியர் காலனியிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பிரம்மாண்டமான கலையரங்கம் அமைக்க முடிவானது. மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் ஆங்கில மொழிப்பேச்சுத்திறனை வளர்க்க, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு தனியார் ஆங்கில மொழி பயிற்சி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சி அளி த்து, பின் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை உடனடியாக துவக்க மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில் மாநகராட்சி தலைமை பொறியாளர் கருணாகரன், மாநகராட்சி கல்வி அலுவலர் சோமசுந்தரி, கல்விக்குழு உறுப்பினர்கள் தமிழ்செல்வி, ÷ஷாபனா, செந்தில் குமார், கார்த்திக் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.