தினமலர் 22.07.2010
மாநகராட்சி, மண்டல அலுவலகங்களில் விரைவில் தொடு திரை தகவல் வசதி
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் விரைவில் பொதுமக்கள் தாங்களே எளிதில் விபரங்களை பெற தொடு திரை தகவல் வசதி செய்யப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி அலுவலகம், 4 மண்டல அலுவலகங்களில் தொடு திரை தகவல் எந்திர தகவமைப்பு வசதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நெல்லை மாநகராட்சியால் வசூலிக்கப்படும் வரி, வரியில்லா வருவாய் விபரங்கள், மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள், பிறப்பு, இறப்பு குறித்த பதிவு விபரங்கள், மாநகரின் புராதன வரலாறு தகவல்கள் அனைத்தையும் பொதுமக்கள் தாங்களே தொடு திரையை இயக்கி பெற்று கொள்ளலாம். இதன் மூலம் ஒளிவு மறைவற்ற நிலையில் மாநகராட்சியின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.