தினமலர் 25.10.2010
மாநகராட்சி மாற்றுத்திறன் பணியாளர் ஊர்திப்படி உயர்வு
திருச்சி
: திருச்சி மாநகராட்சி மாற்றுத்திறன் பணியாளருக்கு ஊர்திப்படியை உயர்த்துவதுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரசு நிதித் துறை சார்பில்
, மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படியை உயர்த்துவது தொடர்பாக கடந்த ஏழாம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், “அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறன் பணியாளர், அலுவலர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக அக்டோபர் முதல் தேதியிலிருந்து உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது‘ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை அமல்படுத்துவதுக்கு ஒப்புதல் அளித்து, திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.