தினமணி 10.03.2010
மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைக்க கோரியமனு தள்ளுபடி
பெங்களூர், மார்ச் 9: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை ஒருநாள் ஒத்திவைக்கக் கோரி ஜெயின் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு மார்ச் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தேர்தலை ஒருநாள் தள்ளிவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனு விவரம்:
பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு மார்ச் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மகாவீர் ஜெயந்தியாகும். இதில் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொள்வார்கள். அன்று நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அன்று வாக்குப் பதிவு இருப்பதால் ஜெயின் சமூகத்தினரால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, வாக்குப் பதிவை ஒருநாள் தள்ளிவைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
நீதிபதிகள் வி.கோபால கெüடா, பி.எஸ். பாட்டீல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் அந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்