தினமணி 19.08.2013
தினமணி 19.08.2013
மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற புதிய வாகனங்கள்
மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்ற புதிதாக 16 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டன.
மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கு
குப்பை அள்ளத் தேவையான வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.10 கோடி மானியமாகப்
பெறப்பட்டது.
இதில், 50 டம்பர் பிளேசர் வாகனங்கள், 2 காம்பேக்டர் வாகனங்கள், 400
டம்பர் பின் மற்றும் 125 காம்பேக்டர் பின் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன.
இதில், தலா 17 டம்பர் பிளேசர் வாகனங்கள் ஏற்கெனவே 2 கட்டங்களாக
விநியோகிக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 3-ம்
கட்டமாக 16 டம்பர் பிளேசர் வாகனங்கள் சனிக்கிழமை பயன்பாட்டுக்காக
வழங்கப்பட்டன.
இந்த வாகனங்களின் சாவிகளை அவற்றின் ஓட்டுநர்களிடம் மாநகராட்சி மேயர்
வி.வி.ராஜன் செல்லப்பா, ஆணையர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மேயர், புதிதாக வழங்கப்பட்ட 16 டம்பர் பிளேசர்
வாகனங்களுடன் சேர்ந்து மொத்தம் 100 வாகனங்கள் மாநகராட்சியில் இயங்குகின்றன.
இதன் மூலம் வார்டுக்கு ஒரு வாகனம் வீதம் குப்பை அள்ளும் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.