மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களை அதிகரிக்க வேண்டும்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் மக்கள்தொகைக்க்கேற்ப துப்பரவு பணியாளர்களின் எண்ணிக்கையைஉயர்த்தவேண்டும் என திருப்பூர் மாவட்ட சுகாதார தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடத்தில் மனு அளிக்கபட்டது.
அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சியில் மக்கள்தொகை 8.50 லட்சம் பேரும், மாநகராட்சிக்குள் வந்துசெல்கிற 1.50 லட்சம் பேரும் என ஒட்டுமொத்த 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகராட்சியில் அரசு உத்தரவுப்படி 1000 பேருக்கு 3 துப்புரவு தொழிலாளி வீதம் 3000 பேர் இருக்கவேண்டும்.
அதேபோல் திருப்பூர் மாநகராட்சியில் சுய உதவிக்குழு மூலம் ஒப்பந்தமுறையில் துப்புரவு பணி மேற்கொண்டுவருவதால் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சம்பளம் மற்றும் சட்ட உரிமைகள் மறுக்கப்படுகிறது.
எனவே ஒப்பந்தமுறையை ரத்துசெய்யவேண்டும். தற்போதுள்ள 800 துப்புரவு பணியாளர்களில் 117 பேருக்குதான் மாநகராட்சி குடியிருப்பு இருக்கிறது. எனவே வீடில்லாத நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டும். திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கபட்ட பகுதிகளிலுள்ள துப்பரவு தொழிலாளர்களை நிரந்தரபடுத்த வேண்டும், மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சிட்டி அலவன்ஸ் தொகையை நிலுவையுடன் சேர்த்து வழங்கவேண்டும். மலேரியா பிரிவிற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்கவேண்டும் துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்ய கருவிகள், காலணிகள் வழங்கபடவேண்டும்.
சீருடைக்கான தையல்கூலி வழங்கபடவேண்டும் அதேபோல் துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய பணப்பயன் மற்றும் சம்பள உயர்வை காலதாமதமில்லாமல் வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.