தினத்தந்தி 31.12.2013
மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் ஜெயா
தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து 12 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பார்வையிட்ட மேயர், மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு
இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பழுதடைந்த தெருவிளக்குகளை
பழுதுநீக்கம் செய்திடவும், சாக்கடைகளை தூர் வாரவும், கோரிக்கை மனுக்கள்
மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,
நகரப்பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர்கள் அருணாசலம், நாகேஸ், நகர்நல
அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர்கள் தனபாலன், தயாநிதி, பிரபுகுமார்ஜோசப்,
உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், அமுதவள்ளி மற்றும் மாநகராட்சி
அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.